search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பறிப்பு"

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
    • இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இரணியல் :

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கில் ஜெயிலில் இருந்த ஒரு நபரை நீதிமன்றம் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தலக்குளம், கள்ளியங்காடு பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர் என தெரிய வந்தது. விசாரணையில் அவர் முளகுமூடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (வயது 42) என்பதும், திருவட்டார் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கொலை செய்தது தெரியவந்தது. மேலும் நாகர்கோவில் பிரபல துணிக்கடையின் பின்புறம் நடந்த செயின் பறிப்பு வழக்கில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட விபரம் தெரியவந்தது. அவரை இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • மொபட்டில் வீடு திரும்பியபோது கொள்ளையர்கள் கைவரிசை
    • சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

    குனியமுத்தூர்.

    கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள வி.எஸ். என் கார்டன் பகுதியை சேர்ந்த பிரதீப் மனைவி வனிதா (வயது31).

    இவரது மாமியார் கடந்த 3நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே வனிதா மாமியாரை அழைத்துக் கொண்டு, மொபட்டில் சுந்தராபுரத்தில் உள்ள பிசியோதெரபி மருத்துவமனைக்கு சென்றார்.

    அங்கு அவரது மாமியாருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் 2 பேரும் மொபட்டில் வீடு திரும்பினர்.

    அப்போது மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பாலம் அருகே, இன்னொரு பைக்கில் வந்த 2 பேர், வனிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை மின்னலென பறித்தனர்.அவர்களை வனிதா தடுக்க முயன்ற போது, நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் வனிதாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. மாமியாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சுந்தராபுரம் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்த சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.
    • மோட்டார் சைக்களிவ் வந்த இருவர் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (75) .

    இவர் மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அங்கு நேற்று மதியம் பள்ளிக்கு சென்று இருந்த பேரக்குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்களிவ் வந்த இருவர், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் இருவரும் காந்திமதியிடம் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வயதானவர்கள் கழுத்தில் நகை அணிந்து தனியாக செல்லக்கூடாது வழிப்பறி நடக்கிறது.

    எனவே கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கழட்டித் தாருங்கள்" எனக் கூறி அவரது மணிபர்ஸில் வைப்பது போல, ஏமாற்றி செயினை திருடி சென்றுள்ளனர்.

    வீட்டில் வந்து மூதாட்டி காந்திமதி பார்த்தபோது செயின் இல்லை.

    இது தொடர்பாக மன்னார்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் எனக் கூறி மூதாட்டி காந்திமதி இடம் தங்க சங்கிலியை நூதனமாக திருடிய இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசி டிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் மன்னார்குடி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்த ரவணைய்யா நாயுடு என்பவரின் மனைவி மூதாட்டி புள்ளம்மாள் (வயது 70). இவர், கடந்த மாதம் 11-ந்தேதி வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் செல்ல முயன்றபோது அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன், அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றான்.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த வாலிபர் ஜான்பாண்டியன் (37) என்பவரை கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அதிர்ச்சியடைந்த அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்து புர்கா அணிந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது58). இவர் கடந்த 3-ந்தேதி அச்சன்புதூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்திற்கு சென்றார்.

    அப்போது இவரது கழுத்தில் கிடந்த 48 கிராம் எடை கொண்ட தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    இதுபோன்று கடந்த மாதம் 28-ந்தேதி கடைய நல்லூர் முத்துகிருஷ்ணா புரம் பெரிய தெருவை சேர்ந்த சேர்த்தியன் மனைவி ஜோதி பாலா தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்ததில் நின்றபோது அவரது மகள் கழுத்தில் கிடந்த 24 கிராம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து கடையநல்லூர் பகுதிகளில் கோவில் திருவிழாக்கள், பஸ் நிலைய கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து புகார் வந்தன.

    இதையடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவிட்டார். இந்நிலையில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் பஸ் நிறுத்தத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்த போது 2 பெண்கள் சிறுமி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்து செல்லும் காட்சி இருந்தது. விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ராஜ கோபால்நகர் மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த திருப்பதி மனைவி அய்யம்மாள் (35) என்பது தெரியவந்தது.

    மேலும் அய்யம்மாள் திருவிழாக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்து புர்கா அணிந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது.

    • நேற்று மாலை விஜயலட்சுமி பள்ளி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
    • மகன், மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று இருளஞ்சேரியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மனைவி விஜயலட்சுமி (42). இவர் பூண்டி அடுத்த வெள்ளத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் பள்ளிக்கு தினமும் மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி பள்ளி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    புதூர் அருகே திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    பேரம்பாக்கம் அடுத்த சத்தரை, சாய் ரித்விக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி பூங்கோதை (34). இவர் தனது மகன், மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று இருளஞ்சேரியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    பேரம்பாக்கம் சத்தரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கோதை கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
    • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையாக சுகன்யா (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் இவர் பணி முடிந்து தனது மொபட்டில் பல்கலைக்கழகம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே சென்று கொண்டு இருந்தார். அங்கு இருந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார்.

    இதுகுறித்து தெரியவந்ததும் கருப்பூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது உதவி பேராசிரியை சுகன்யாவிடம் நகையை பறித்து சென்றது ஓமலூர் மாட்டு காரன்புதூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் உள்பட 2 பேர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாலிபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது.
    • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீளமேடு,

    திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் ரமணி(வயது56).

    இவர் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து சொந்த வேலை காரணமாக கோவை பீளமேடு வந்தார். பிளமேடு பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், ரமணி பஸ்சை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது தனது கழுத்தில் இருந்த செயின் மாயமாகி இருந்தது.கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊட்டியை சேர்ந்தவர் சாம்(19). இவர் டிப்ளமோ படித்து விட்டு, கோவை காந்திபுரத்தில் தங்கி ரெயில் நிலைய பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.இவர் தனது பயன்பாட்டிற்காக மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அதனை தான் தங்கியிருக்கும் லாட்ஜ் அருகே நிறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போய் விட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சியில் பதுங்கி இருந்த கலையரசனை நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சேகர்.இவரது மனைவி ராணி (வயது 62). இவர் கடந்த 19ந் தேதி கிழக்கு கோவிந்தாபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி ராணியிடம் 2½ பவுன் செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் ராணி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ராணியின் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பறித்துச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கலையரசன்(24), திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த பாரதி என்பதும், இவர்கள் 2 பேர் மீதும் திருச்சி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருச்சியில் பதுங்கி இருந்த கலையரசனை நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாரதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • செயின் பறிப்பு சம்பவம் பெண்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகிறனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் ரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.

    இதுகுறித்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி லதா(வயது 55). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார்.

    அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் லதா கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து அவர் ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல கணபதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி(58). சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் தமிழ்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். மாநகரில் தொடர்ந்து நடந்து வரும் செயின் பறிப்பு சம்பவம் பெண்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் செயின் பறிப்பு ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகிறனர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்த காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் மர்மந பர்களை தேடி வருகின்றனர்.

    மாநகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை அடுத்து மாநகர் முழுவதும் நேற்று இரவு முதல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ்நிலையம், மார்க்கெட் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மாநகருக்குள் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

    வாகனங்களில் வருபவர்களிடம் தீரவிசாரித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

    • கொள்ளையன் தாலி செயினுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
    • கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது ஏற்கனவே வழிப்பறி திருட்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    போரூர்:

    சென்னை அண்ணாநகர் மேற்கு டி.வி.எஸ்.அவின்யூ பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் இவரது மனைவி கோமதி (வயது70).

    மூதாட்டி கோமதி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்டு அங்கு வந்த மர்ம வாலிபர் ஒருவர் தண்ணீர் கேன் சப்ளை செய்ய வந்துள்ளேன் என்று கூறிய படியே கோமதியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். பின்னர் திடீரென அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த கோமதி அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளையன் தாலி செயினுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெ.ஜெ. நகர் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டி செயின் பறித்து தப்பியது பிரபல வழிப்பறி திருடனான ஓட்டேரி சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த பிரகாஷ் என்கிற லோலாய் பிரகாஷ் (38) என்பது தெரிந்தது.

    போலீஸ் உதவி கமிஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாடி பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்றில் பதுங்கி இருந்த பிரகாசை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது ஏற்கனவே வழிப்பறி திருட்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 4 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்த தனிப்படை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
    • பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    கரூர் மாவட்டம் கடவூர் செம்பிநாதம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 51). விவசாயியான இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மணப்பாறை பஸ் நிலையம் வந்தார். பின்னர் திருச்சி செல்லும் பஸ் நிறுத்த பகுதிக்குச் சென்றார்.

    அப்போது 3 மர்ம நபர்கள் அருகாமையில் வந்து மயக்க மருந்தை அவர் மீது தெளித்தனர். அடுத்த நொடி கன்னியப்பன் மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.

    உடனே அந்த ஆசாமிகள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அதன் பின்னர் இதுகுறித்து கன்னியப்பன் மணப்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×